படம் தமிழகத்தில் வெளியிட முடியவில்லை : தனது நடிப்பில் வெளியான போர்த் ப்ளோர் படத்தை தனது சொந்த ஊரான திண்டுக்கல் மாவட்டம் பழநியில் பார்த்த நடிகர் ஆரி, பழனி கோயிலில் சாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து, அவர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசியபோது கூறியதாவது : நடிகர் மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்க யாருக்கும் உரிமையில்லை. நடிகர் விஜய்க்கு மட்டுமல்ல பலருக்கும் நடக்கிறது. சோசியல் மீடியா வளர்ச்சி தனிமனித விமர்சனத்திற்கு ஆபாயகரமான சூழலுக்கு கொண்டு செல்கிறது. விவாகரத்து என்பது இருவரின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. அதில் கருத்து சொல்வது அநாகரிகமானது. அரசியலும் சரி, தனிப்பட்ட வாழ்க்கையும் தனி தனிமனித தாக்குதல் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியது அல்ல. பெண்களை குறித்து பேசும் அதே வேளையில் ஆண்களை பற்றி பேசுவதில்லை. ஆண்களின் வீரம் பெண்களின் ஆடையில் வந்துள்ளது. பெண்களுக்கான பிரச்சனையில் ஆண்கள் குரல் கொடுக்க வேண்டும். எந்த விசயமாக இருந்தாலும் சரி. விமர்சனங்கள் வரவேற்க கூடியதுதான். தனிமனித தாக்குதல் வன்முறையாக இருக்கிறது. குறிப்பாக, பெண்களுக்கு இது அதிகளவில் நடக்கிறது. முன்பு, திரைப்படங்களில் எப்போதும் கற்பழிப்பு காட்சிகள் இருக்கும். இப்போது அவை படங்களில் இல்லை. விமர்சனம் என்ற பெயரில் வந்துவிட்டது. மால்களில் சிறிய படங்களுக்கு திரையரங்குகள் வழங்கப்படுவதில்லை. எங்கள் போர்த் ப்ளோர் படத்திற்கு இது தற்போது நடக்கிறது. தமிழகத்தில் தமிழர் தயாரிக்கும் படங்களை திரையிட முடிவதில்லை. கேட்டால், விளம்பரம் போதவில்லை என்கின்றனர். படம் பிடித்துள்ளதா, இல்லையா என்பதை மக்கள் முடிவெடுக்க வேண்டும். திரையரங்க உரிமையாளர்கள் தான் எடுக்கின்றனர். எங்கள் பட தயாரிப்பாளர் கண்கலங்காத குறையாக பேசுகிறார். அதிக விளம்பரம் செய்யும் படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படுகிறது. மற்ற படங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. தயாரிப்பு செலவை விட விளம்பரம் செய்ய வேண்டிய செலவு அதிகரித்துள்ளது. புதிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்றுள்ளனர். அவர்களிடம் இதற்கு நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவோம். புதிய தயாரிப்பாளர்கள் வர தயங்குகின்றனர். நல்ல கதைகள் இல்லை என்கின்றனர். நல்ல கதையோடு படம் எடுத்து வந்தால் திரையரங்கம் தருவதில்லை. தமிழகத்தில் தமிழர் எடுத்த படத்தை வெளியிட முடியவில்லை என்பது அவமானம். விளம்பரத்திற்கென இவ்வளவு தொகை செய்யவேண்டுமென நிர்ணயிக்கவாவது செய்ய வேண்டும். ஏன் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்பதற்கான காரணத்தையாவது தெரிவியுங்கள். கெஞ்சி, கெஞ்சி திரைப்படத்தை வெளியிட வேண்டியதாக உள்ளது. இது போன்ற விசயங்கள் தவிர்க்கப்பட்டால், நல்ல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்கள் வருவர். ஜனநாயகன் படம் சென்சார் விவகாரம் குறித்து முழுமையாக விவரம் தெரியாமல் கருத்து தெரிவிக்கமுடியவில்லை. 2026 தேர்தலில் மக்களுக்கு எவர் சரியென படுகிதோ அவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். மக்களுக்கான நல்ல ஆட்சி கொடுப்பவர்களுக்கு மக்கள் வாக்களிப்பர். அவர்கள் விருப்பப்பட்டவர்களுக்கு வாக்களிப்பர். Related Link புதிய சர்வதேச திரைப்பட நகரத்தில் "மாம்-2" படப்பிடிப்பு