பெண்கள் மீது நடைபெறும் பாலின அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான பிரச்சாரத்துக்கு ஆதரவளிப்பதற்காக நடிகை சமந்தா, ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்துள்ளார். இது குறித்துப் பேசிய சமந்தா, “ஐ.நா.மகளிர் இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பெருமையாக உள்ளதாகவும், முன்பு நேரில் நடந்த பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தற்ப்போது டிஜிட்டல் திரைகளை பின்தொடர்ந்து, பெண்களின் குரலை மவுனமாக்குகிறது என தெரிவித்தார். இந்த பிரச்சாரம் நவம்பர் 25 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறும் என தெரிவிக்கபட்டுள்ளது.