உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்-ஐ சந்தித்த அகண்டா 2 படக்குழுவினர், அவருக்கு திரிசூலத்தை பரிசாக வழங்கினர்.பாலையா நடிப்பில் கடந்த 2021-ம் ஆண்டு வெளியான அகண்டா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக இரண்டாவது பாகம் உருவாகி உள்ளது. போயபதி ஸ்ரீனு இயக்கும் இப்படத்தில் சம்யுக்தா கதாநாயகியாக நடித்திருக்கிறார். இப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக உள்ள நிலையில் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.