ஸ்பெயினில் மஹிந்த்ரா Formula E Gen 2 காரை ஓட்டிப் பார்த்த அஜித்குமாரின் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. சினிமாவை தாண்டி கார் பந்தயத்தில் கலக்கி வரும் அஜித்குமார் சமீபத்தில் ஸ்பெயினில் நடந்த 24 மணி நேர கார் பந்தயத்தில், தனது அணியுடன் இணைந்து 3 ஆவது இடம் பிடித்து இந்தியாவிற்கே பெருமை சேர்ந்தார். இதனை தொடர்ந்து இந்தாண்டு இறுதியில் மலேசியாவிலும், அடுத்த ஆண்டு அபுதாபியில் நடைபெறும் கார் பந்தய போட்டிகளிலும் அஜித்குமார் ரேசிங் அணி கலந்து கொள்கிறது.