ரஜினி நடிக்கும் 173ஆவது திரைப்படத்தை தனுஷ் இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினி 173 திரைப்படத்தை இயக்கும் முடிவிலிருந்து இயக்குநர் சுந்தர் சி பின்வாங்கிய நிலையில், அடுத்த வாய்ப்பு யாருக்கு என்ற கேள்வி ரசிகர்களிடையே எழத் தொடங்கியது. பவர் பாண்டி மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்த தனுஷ், ராயன், நிலவுக்கு என் மேல் என்னடி கோவம், இட்லி கடை போன்ற திரைப்படங்களை இயக்கி இயக்குநராகவும் தன்னை நிரூபித்தார். ஒரு வேளை ரஜினியை வைத்து தனுஷ் இயக்கும் பட்சத்தில் திரைப்படம் எந்த ஜானரில் இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விவாதித்து வருகின்றனர்.