பாலிவுட்டில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள தேரே இஷ்க் மே திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. முன்னணி பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் இத்திரைப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் ஏ.ஆர். ரஹ்மான் படத்திற்கு இசையமைத்துள்ளார் இத்திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்தது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் வரும் 28-ம் தேதி வெளியாக இருக்கிறது. இத்திரைப்படத்தில் போர் விமானி கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ளார்.