மலேசியாவில் நடைபெற்ற எடிசன் விருது விழாவில் ஹிட் லிஸ்ட் திரைப்படத்திற்காக விஜய் கனிஷ்கா, சிறந்த அறிமுக நடிகர் என்ற விருது பெற்றார். சிறப்பான நடிப்பும், கவர்ச்சிகரமான தாக்கமும் கொண்ட ஹிட் லிஸ்ட் படத்தில் தனக்கென ஓர் இடத்தை உருவாக்கிய விஜய் கனிஷ்கா, பிரபல இயக்குநர் விக்ரமனின் மகனாவார். விஜய் கனிஷ்காவுக்கு திரைத்துறையினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.