கங்குவா படத்தின் எடிட்டர் நிஷாத் யூசுப் கொச்சியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது படக் குழுவினரை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. மலையாளத்தில் வெளியாகி விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றிப் பெற்ற தல்லுமலா, உண்டா, சவுதி வெள்ளக்கா, அடியோஸ் அமிகோஸ் உள்ளிட்ட படங்களின் எடிட்டரான நிஷாத் யூசுப், கங்குவா படத்தின் எடிட்டராகவும் பணியாற்றி இருந்தார். 43 வயதான இவர் கொச்சி பனம்பள்ளி நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் மலையாள மற்றும் தமிழ் திரைத்துறையினரை அதிர வைத்துள்ள நிலையில் பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.