வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விரும்பவில்லை என தனது மகன் கூறியதாக பிரபல நடிகர் ஜாக்கிசான் தெரிவித்துள்ளார். ஜாக்கி சான் தம்முடைய 3 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முழுவதையும் ஏழைகளுக்காக அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார். இதனிடையே நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது சொத்துகள் முழுவதையும் அறக்கட்டளைக்கு வழங்கியதால் வருத்தம் ஏதும் இல்லையா என மகன் ஜேசி ஜானிடம் கேட்டதாகவும், அதற்கு பதிலளித்த தனது மகன் தானும் திறமைசாலி தான் என்றும், தானாகவே உழைத்து பணம் சம்பாதிக்க விரும்புவதாக கூறியதாகவும் தெரிவித்தார்.