கணவர், அப்பா, தாத்தா, சார் என பல பெயர் சொல்லி நம்மை அழைத்தாலும், பழைய நண்பன் ”டேய்” என அழைக்கும் போது வரும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை என நடிகர் ரஜினிகாந்த் உருக்கமாக கூறியுள்ளார். கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் நடந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் காணொலி வாயிலாக கலந்து கொண்டு பேசிய அவர், எவ்வளவு வேலையாக இருந்தாலும், 6 மாதத்திற்கு ஒருமுறை, பெங்களூரு சென்று தன்னுடன் பணியாற்றிய நடத்துநர், ஓட்டுநர் போன்ற நண்பர்களை சந்தித்து பேசுவதாக குறிப்பிட்டார்.இதையும் படியுங்கள் : போலீஸ் பதில் சொல்லணும்..! - ஐகோர்ட் அதிரடி