வரும் 12-ம் தேதி கோவாவில் நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் நடைபெறவுள்ள நிலையில், திருமண பத்திரிகை வெளியாகியுள்ளது. கோவாவில் நடைபெறும் திருமண விழாவில் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர் மட்டும் பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. மேலும் சென்னையில் பிரம்மாண்டமாக திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.