கேரளாவை சேர்ந்த பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவு காரணமாக ஆலப்புழையில் காலமானார். 1970களில் 'ஒத்தனிண்டே மகன்' என்ற படம் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமாகி, தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் அப்பச்சன். வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த இவர், உடல்நல குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.மேலும் படியுங்கள் : ‘ஹாட் ஸ்பாட் 2 மச்’ படத்தின் டிரெய்லர் வெளியானது