அனுபமா பரமேஸ்வரன் நடித்து வெளியாக இருந்த 'லாக்டவுன்' திரைப்படம் மழை காரணமாக வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது. இது குறித்து படக்குழு வெளியிட்டுள்ள பதிவில், ரசிகர்கள், பார்வையாளர்கள், திரையரங்க ஊழியர்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.