சசிகுமார் நடிப்பில் உருவாகி வரும் "மை லார்ட்" திரைப்படம் சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டும் வகையில் இருக்கும் என்பது டிரெய்லரை பார்த்தாலே தெரிகிறது. கிட்னி திருட்டு, தூத்துக்குடி துப்பாக்கி சூடு, சாமானியர்களின் அன்றாட போராட்ட வாழ்க்கை என விளாசி தள்ளியுள்ளது. மேலும், திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரை எல்லா கட்சியினரையும் விமர்சித்து வசனங்களும், காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. ஆகவே, "மை லார்ட்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதையும் படியுங்கள் : அர்ஜுன் தாஸ், அன்னா பென் நடிக்கும் புதிய திரைப்படம்