பராசக்தி திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் இன்னும் வழங்கப்படாததால் படம் நாளை வெளியாகுமா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ள நிலையில் ரிலீஸ் தேதியை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு மீண்டும் போஸ்டரை வெளியிட்டு படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதனால் படம் வரும் 10ம் தேதி வெளியாகும் என்பது உறுதியாகியுள்ளது. முன்னதாக பராசக்தி திரைப்படத்தில் தணிக்கை வாரியம் இந்தி திணிப்பு எதிர்ப்பு காட்சிகளை நீக்கவோ, அல்லது அதில் உள்ள வசனங்களை மாற்றவோ பரிந்துரை செய்ததாக கூறப்படுகிறது. அப்படி செய்தால் படத்தின் சாரத்தை பலவீனப்படுத்தும் என்று இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்ததாக சொல்லப்படுகிறது.இதையும் படியுங்கள் : கலைக்கல்லூரியில் நடைப்பெற்ற பராசக்தி ப்ரோமோசன் நிகழ்ச்சி