காளஹஸ்தி கோயிலில் நடிகை சினேகா தனது கணவர் பிரசன்னாவுடன் சாமி தரிசனம் செய்தார்.பிரசித்தி பெற்ற சிவன் கோயிலான ஸ்ரீ காளஹஸ்தி கோயிலுக்கு தனது கணவரும், நடிகருமான பிரசன்னாவுடன் சென்ற நடிகை சினேகா ராகு-கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து, மூலவர்களான ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானம்பிரசுனாம்பிகை தாயாரையும் அவர்கள் தரிசனம் செய்தனர். அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தினர் பொன்னாடை போர்த்தி கவுரவித்ததையடுத்து, பிரசாதம், சாமி படம் வழங்கி வேதப்பண்டிதர்கள் வேத மந்திரங்களை பாடி ஆசி வழங்கினர்.