தனது பெயரை பயன்படுத்தி வாட்சப்பில் ஒரு நபர் போட்டோகிராபர்களை தொடர்பு கொண்டு போட்டோஷூட் பற்றி பேசுவதாக நடிகை அதிதி ராவ் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். போட்டோஷூட் பற்றி வரும் அழைப்புகள் தன்னுடையது அல்ல என்றும், அந்த எண்ணிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்குமாறும் அதிதி ராவ் பதிவிட்டுள்ளார். சொந்த வேலை என்றாலும் தன்னுடைய குழுவில் உள்ள நபர்களின் எண்ணையே பயன்படுத்துவதாக அதிதி ராவ் கூறியுள்ளார்.