பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வரும் கில்லர் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, படத்தின் இயக்குநரும், நடிகருமான எஸ்.ஜே. சூரியாவுக்கு காயம் ஏற்பட்டதால் படபிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னை பாலவாக்கத்தில் நடிகர் எஸ்.ஜே சூர்யா இயக்கி நடிக்கும் ‘கில்லர்’ திரைப்படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று நடைபெற்று வந்தது. ரோப் கயிறு உதவியுடன் எஸ்.ஜே.சூர்யா சண்டைக் காட்சியில் நடித்து வந்த நிலையில், எதிர்பாராத விதமாக இரும்பு கம்பியில் மோதி விபத்துக்குள்ளானார்.மேலும் படியுங்கள் : பழம்பெரும் நடிகர் புன்னப்ரா அப்பச்சன் காலமானார்