'தக் லைப்' திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள முதல் பாடலான 'ஜிங்குச்சா' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள இப்படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், முதல் பாடல் வெளியாகியுள்ளது. இப்பாடல் வரிகளை கமல்ஹாசன் எழுதி உள்ளது குறிப்பிடத்தக்கது.