நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தில் இடம் பெற்றுள்ள 'ஓ மாரா' பாடல் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஓ மாரா' பாடலை பிரபல ராப் பாடகர் பால் டப்பா பாடியுள்ளார்.