‘கார்மேனி செல்வம்’ ரிலீஸ் தேதி அறிவிப்பு :இயக்குநர்கள் சமுத்திரக்கனி, கவுதம் மேனன் நடித்துள்ள ‘கார்மேனி செல்வம்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3-ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ராம் சக்ரீ இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் லட்சுமி பிரியா சந்திர மௌலி, ரெடின் கிங்ஸ்லி, படவா கோபி, ஹரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கார்மேனி செல்வம் எனும் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படத்தின் டீசர் :இயக்குநர் செல்வராகவன் நடிப்பில் உருவாகியுள்ள 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படத்தின் டீசரை நடிகர் தனுஷ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இந்த படத்தில் அறிமுக நடிகை குஷி ரவி, வை.ஜி. மகேந்திரன், மைம் கோபி, கௌசல்யா, சதீஷ், லிர்திகா, என். ஜோதி கண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.கவுதம் கார்த்திக் நடிக்கும் 19-வது திரைப்படம் : கவுதம் கார்த்திக் நடிக்கும் 19-வது படத்தின் டைட்டில் டீசர் இன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. கணேஷ் கே. பாபு புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ஜி.ஆர்.கே 19 என்ற தற்காலிகப் பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் தினா ராகவன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் டைட்டில் டீசரை இயக்குநர் மாரி செல்வராஜ் இன்று வெளியிடுகிறார்.சாய் அபயங்கரின் புதிய ஆல்பம் வீடியோ பாடல் :இசையமைப்பாளர் சாய் அபயங்கரின் புதிய ஆல்பம் வீடியோ பாடலை நடிகர் சிம்பு வெளியிட்டுள்ளார். "பவழ மல்லி" என தலைப்பிடப்பட்டுள்ள இந்த பாடலை விவேக் எழுத, ஸ்ருதி ஹாசன் பாடியுள்ளார். இந்த பாடலில் சாய் அபயங்கருடன் சேர்ந்து கயாடு லோஹர் நடனமாடியுள்ளார். இதுவரை இசை அமைப்பது மற்றும் பாடல்கள் மட்டுமே பாடி வந்த சாய் அபயங்கர் நடனம் ஆடுவதிலும் தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். Related Link வைரல் ஆன விஜய், திரிஷா