கோவாவில் இந்திய சர்வதேச திரைப்பட விழா இன்று முதல் கோலாகலமாக தொடங்குகிறது. 56 ஆவது இந்திய சர்வதேச திரைப்பட விழா கோவாவின் பனாஜியில் இன்று முதல் வரும் 28ஆம் தேதி வரை நடைபெறவுள்ள நிலையில், இவ்விழாவில் 81 நாடுகளை சேர்ந்த 240க்கும் அதிகமான படங்கள் திரையிடப்படவுள்ளன. அதன்படி இவ்விழாவில் சிவகார்த்திகேயனின் அமரன், அப்புக்குட்டியின் பிறந்தநாள் வாழ்த்துகள் மற்றும் இ.வி.கணேஷ்பாபு இயக்கி நடித்துள்ள ஆநிரை குறும்படம் திரையிடப்படவுள்ளன.