கடந்த மாதமே வெளியாகும் என அறிவிக்கப்பட்டு பின்னர் ஒத்திவைக்கப்பட்ட நடிகர் கார்த்தியின் 'வா வாத்தியார்' படம் பொங்கல் வெளியீடாக ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. தயாரிப்பு நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்ட வழக்கு காரணங்களால் 'வா வாத்தியார்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி போனது . இதனிடையே பொங்கல் ரேசில் இடம் பெற்ற விஜயின் ஜனநாயகன் ரிலீஸ் தேதி தள்ளி போன காரணத்தால் 'வா வாத்தியார்' படத்தை வரும் 14 ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இதையும் படியுங்கள் : மோகன் ஜி-யின் திரௌபதி-2 டிரைலர் வெளியானது