திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கேண்டீன் FUSE கேரியரை,பிடுங்கியது குறித்து டீன் ஹரிஹரனிடம் செய்தியாளர் விளக்கம் கேட்டபோது, பதில் அளிக்க மறுத்து விட்டதாக செய்தி போட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதிலளித்தார். இந்த மருத்துவமனையில் உள்ள கேண்டீன், ஒப்பந்த அடிப்படையில் செயல்பட்டு வரும் நிலையில், கேண்டீனுக்கான மின் கட்டணத்தை, ஒப்பந்ததாரர் கட்டவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மருத்துவமனை டீன், FUSE கேரியரை பிடுங்கி சென்றதாகவும், மின் கட்டணம் கட்டிய பிறகும், FUSE கேரியரை தரமறுப்பதாகவும் குற்றம்சாட்டு எழுந்துள்ளது.