ஃபெஞ்சல் புயல் பாதிப்பு நிவாரண நிதியாக விசிக சார்பில் 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 2 பேர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் 4 பேரின் ஒரு மாத ஊதியமான 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார். அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனை செல்வன், பனையூர் பாபு, எஸ்.எஸ்.பாலாஜி, ஆளூர் ஷா நவாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்