மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருள்மிகு உக்தவேதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற ஆயிரத்து 8 சங்காபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கார்த்திகை மாத 3-வது சோமவாரத்தை ஒட்டி, பூஜிக்கப்பட்ட கங்கை நீர் சங்குகளில் நீரப்பப்பட்டு, சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. பின்னர், புனித நீரால் சிவன் மற்றும் அம்பாளுக்கு சங்காபிஷேகம் செய்யப்பட்டது.