ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரி பாலமுருகன் கோவிலில் நடைபெற்ற ஆயிரத்து 8 திருவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு, கோவிலில் மஹா கணபதி மற்றும் விஜயதுர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து, மலையடிவார மணிமண்டபத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்றது.