தஞ்சையில், ஆந்திரா மாநிலத்தில் இருந்து காரில் ரகசிய அறையில் பதுக்கி வைத்து கடத்தி வரப்பட்ட 20 லட்சம் மதிப்பிலான 103 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து 3 பேரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கஞ்சாவை படகு மூலம் இலங்கைக்கு கொண்டு செல்வதற்காக கடத்தி வரப்பட்டது தெரியவந்தது.