சென்னை, வேளச்சேரியில் உள்ள HDFC வங்கிக் கிளையில் கிடைத்த ஒரு கிலோ 250 கிராம் தங்கம் குறித்து முன்னாள் பெண் மேலாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியில் கணக்கு தொடங்க வேண்டும் என கடந்த 5ஆம் தேதி, பர்தா அணிந்து வந்த பெண் ஒருவர், ஆவணங்கள் எடுத்து வரவில்லை எனக் கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது. அவர் கொண்டு வந்த பையை அங்கேயே விட்டு சென்ற நிலையில், அதனை சோதனை செய்ததில் தங்கக் கட்டி மற்றும் நகைகள் இருந்தது தெரியவந்து. அதற்கு உரிமைகோரி யாரும் வராததால், வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. வங்கி நிர்வாகம் அளித்த தகவலின் பேரில் முன்னாள் மேலாளர் பத்மபிரியா என்பவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.