திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் நடைபெற்ற தேசிய மேல்நிலைப்பள்ளியின் 125 ஆம் ஆண்டு விழாவில், முன்னாள் மற்றும் இந்நாள் மாணாக்கர்கள் உற்சாகமாக கலந்து கொண்டனர். இதில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும், சிறந்த மாணவ-மாணவிகளுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.