news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 12ம் ஆண்டு ஸம்வஸ்தர அபிஷேகம்
tv

Also Watch

12ம் ஆண்டு ஸம்வஸ்தர அபிஷேகம்

திருச்சி

52

By: Fyrose Banu

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
try

துவாக்குடியை அடுத்த அருள்தரும் ஒப்பிலா நாயகி உடனுறை அருள்மிகு திருநெடுங்களநாதர் கோயிலில் 12ம்ஆண்டு ஸம்வஸ்தர அபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

சிறப்பு மகா யாகம்
திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமான திருநெடுங்களநாதர் கோயிலில் 12ம்ஆண்டு கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ம்வஸ்தர விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.வண்ண மலர்கள், பட்டு வஸ்திரங்கள், ஆபரணங்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மகா கும்பங்கள் முன்பு சிறப்பு மகா யாகம் நடைபெற்றது.

சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம்
தொடர்ந்து அனுக்ஞை விக்னேஸ்வர பூஜை புண்ணியாவாகனம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதனை தொடர்ந்து தொடர்ந்து செல்வ விநாயகர், வள்ளி, தெய்வானை, சுப்பிரமணியர், திருநெடுங்களநாதர், மங்களாம்பிகை மற்றும் உற்சவ பஞ்ச மூர்த்திகளுக்கு பால், சந்தனம், மஞ்சள் இளநீர், தேன், பஞ்சாமிர்தம், திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

சிவ வாத்திய முழங்க கடம் புறப்பாடு
இதையடுத்து மங்கள வாத்தியம், சிவ வாத்திய முழங்க கடம் புறப்பாடாகி கோயிலை வலம் வந்து திருநெடுங்களநாதர், மங்களாம்பிகை மற்றும் ஏனைய பரிவார தெய்வங்களுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகமும், மகா தீபாரதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடி வழிபாடு செய்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

இசை பேரரசியாக ராஷ்மிகா

2
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved