வேலூர் மாவட்டம், குடியாத்தம் அருகே கூலி வேலை செய்யும் பெண்ணிற்கு, 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி கட்டச் சொல்லி அவரது வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குடியாத்தம் அருகேயுள்ள காலணி தொழிற்சாலையில் வேலை செய்யும் யசோதா என்பவர் தனது வங்கி கணக்கில் போடப்பட்ட 8 ஆயிரம் ரூபாய் சம்பளத்தை எடுக்க ஏடிஎம் சென்றபோது அதில் போதிய இருப்பு இல்லை என வந்துள்ளது. பதறி போன யசோதா சம்பந்தப்பட்ட வங்கிக்கு சென்று கேட்டபோது, 13 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வரி பாக்கி வைத்துள்ளதால் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக வங்கி நிர்வாகம் தெரிவித்துள்ளது.