திருவள்ளூர் மாவட்டம் நசரத்பேட்டை வட்டார போக்குவரத்து சோதனைசாவடியில் சோதனை மேற்கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார், கணக்கில் வராத ஒன்றரை லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர். வட்டார போக்குவரத்து சோதனைசாவடியில் அதிக லஞ்சம் வாங்கப்படுவதாக வந்த புகாரையடுத்து, சுமார் மூன்று மணி நேரம் சோதனை செய்து பணத்தை பறிமுதல் செய்த லஞ்ச ஒழிப்பு போலீசார், அலுவலர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.