பெரம்பலூர் துறைமங்கலத்தில் டேடிங் ஆப் மூலமாக இளம்பெண்ணிடம் பேசி ஆசைவார்த்தை காட்டி, சுமார் 16 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக ஆந்திராவை சேர்ந்த பரத் என்பவர் கைது செய்யப்பட்டார். ரயில்வே துறையில் அரசு பல் மருத்துவர் வேலை வாங்கி தருவதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைகாட்டி, அப்பெண்ணிடம் வங்கி கணக்கு மூலம் பணம் பெற்று மோசடி செய்துள்ளார்.