திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முதல் நாளில் 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முதலில் கோவில் தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு, பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னர், 16 கால் மண்டபத்தில் எழுந்தருளிய பஞ்சமூர்த்திகள், மாடவீதிகளில் வலம் வந்தனர்