மயிலாடுதுறையில், 2 கோடி ரூபாய் மதிப்பிலான ஒன்றரை கிலோ தங்க கட்டியை எடுத்துக் கொண்டு தப்பியோடிய வடமாநில சிறுவனை போலீஸார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிராவை சேர்ந்த சுகாஷ், மயிலாடுதுறை பேருந்து நிலையம் அருகே தங்க நகைகளை உருக்கி தரும் நிறுவனம் நடத்திவருகிறார். இவரது கடையில், அதே மாநிலத்தை சேர்ந்த ஓம்கார் என்கிற 17 வயது சிறுவன் கடந்தவாரம் வேலைக்கு சேர்ந்துள்ளான். இந்த சூழலில், ஒன்றரை கிலோ தங்க நகைகளை உருக்கி கட்டியாக மாற்றிய சுகாஷ், அதனை எடை போட்டு வரும்படி ஓம்காரிடம் கூறியுள்ளார். தங்க கட்டியை எடுத்துக் கொண்டு கடைக்கு வெளியே சென்ற சிறுவன், திடீரென தப்பியோடிவிட்டான்.இதையும் பாருங்கள் - புகாருக்குள்ளான ரேஷன் கடை ஊழியர் பணியிட மாற்றம்