செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வன்னியர் பேட்டையில், மாடி மீது கட்டப்பட்டிருந்த 2 குடிசை வீடுகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது. தகவலறிந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அனைத்தனர். தீ விபத்திற்கு மின்கசிவா அல்லது வேறு எதாவது காரணமா என விசாரணை நடைபெற்று வருகிறது.