கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கோட்டைமேடு பகுதியில் 2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதில், 21 வயது சிவனடியார் பரிதாபமாக உயிரிழந்தார். ஓதுவார் படிப்பை முடித்துவிட்டு திண்டுக்கல்லில் உள்ள தமிழ் ஓதுவார் பள்ளியில் பயிற்றுநராக பணிபுரிந்து வந்த கோட்டைமேடு பகுதியை சேர்ந்த பிரவீன் குமார், பேருந்தில் திண்டுக்கல் செல்வதற்காக வீட்டில் இருந்து வழக்கம் போல் இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கோட்டைமேடு யூனியன் ஆபீஸ் அருகே சென்றபோது எதிரே வை.புதூரை சேர்ந்த ஞானவேல் என்பவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனமும், பிரவீன் குமாரின் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பிரவீன் குமார் பரிதாபமாக பலியானார்.