2 கிராம மக்கள் சாலை மறியல் : கிருஷ்ணகிரி நீர்தேக்க அணை கட்டிய போது அங்கிருந்து வெளியேற்றப்பட்ட கிராமங்களில் 2 கிராம மக்கள் சூளகிரி அருகே வனப்பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு முன்பு குடியமர்த்தப்பட்டனர் கொட்டாயூர் துறிஞ்சிப்பட்டி என்கிற இந்த இரண்டு கிராம மக்களின் ஆடு மாடு மேய்ச்சலுக்கு காட்டிற்குள் செல்ல வனத்துறையினர் அனுமதிப்பதில்லை எனவும் புதிதாக வீடு கட்டினால் வனத்துறையினர் கடும் ஆட்சேபனை தெரிவித்து தடுத்து நிறுத்துகின்றனர் விவசாயம் செய்ய புதிய போர்வெல் அமைக்கவும் வனத்துறையினர் அனுமதிக்காததால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி இரண்டு கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் சூளகிரி - ராமன்தொட்டி சாலை காருபல்லா எனும் இடத்தில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டு வருவதால் பள்ளி கல்லூரி, வாகனங்கள், பொதுமக்கள் செல்ல முடியாமல் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். Related Link மது போதையில் உதவி ஆய்வாளரை தாக்கி கொலை மிரட்டல்