பறவைகள் சரணாலயத்துக்காக 50 ஆண்டுகளுக்கும் மேலாக பட்டாசு வெடிக்காமல் இருக்கும் கிராம மக்களுக்கு வனத்துறை சார்பில் இனிப்பு வழங்கப்பட்டது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேட்டங்குடி - கொள்ளுக்கடிபட்டி பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டு பறவைகள் வருவதால், தீபாவளி பண்டிகை மட்டுமல்லாது, திருவிழா, திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளுக்குக் கூட இந்த இரு கிராம மக்களும் பட்டாசு வெடிப்பதில்லை. ஆகவே, சிவகங்கை மாவட்ட வனத்துறை சார்பில் கிராம மக்களுக்கு ஆண்டுதோறும் இனிப்பு வழங்கி கௌரவித்து வருகின்றனர்.