செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அருகே மரத்தில் கார் மோதியதில் 2 இளைஞர்கள் உயிரிழந்தனர். இலத்தூர் கிராமத்தை சேர்ந்த சந்தோஷ், மதுராந்தகம் பகுதியை சேர்ந்த நண்பர் கார்த்திக்குடன் காரில் சென்றபோது, முதுகரை தனியார் கல்லூரி அருகே சாலையோர மரத்தில் மோதியதில் சந்தோஷ் உயிரிழந்தார். படுகாயமடைந்த கார்த்திக், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.