ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சேந்தமங்கலம் கிராமத்தில் கனகதுர்க்கை அம்மன் கோவிலில் நடைபெற்ற மயிலார் திருவிழாவில் சுற்றியுள்ள 20 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினர். இதனையொட்டி அம்மன் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.