கோவையில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணியாற்றி வந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஒட்டு மொத்தமாக பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில், ஜனவரி மாதத்திற்கான ஊதியம் உள்ளிட்டவற்றை வழங்கப்படும் என அதன் அமெரிக்க தாய் நிறுவனம் மின்னஞ்சல் மூலம் உறுதி அளித்துள்ளது. ஆர்.எஸ்.புரத்தில் செயல்பட்டு வந்த EDU MATICS என்ற அமெரிக்க நிறுவனத்தில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியாற்றி வந்தனர். சில நாட்களுக்கு முன்பு அமெரிக்க நிறுவனம் அலுவலகத்தை திடீரென மூடி, ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. இதனால், அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.