செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் ஏரியில் இருந்து கிளியாற்றில், விநாடிக்கு ஆயிரத்து 900 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. மதுராந்தகம் ஏரியில் கடந்த 2 ஆண்டுகளாக 120 கோடி ரூபாயில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 2 ஆயிரத்து 300 கன அடியாக உள்ளது.