Also Watch
Read this
By: Web Team
இன்று, ஒரேநாளில் இரு முறை உயர்ந்தது ஆபரண தங்கத்தின் விலை.
இன்று மட்டும் ஒரு சவரனுக்கு 2 ஆயிரத்து 400 ரூபாய் உயர்வு.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலையில், இன்று பிற்பகலில் 100 ரூபாய் அதிகரித்து, 11 ஆயிரத்து 900 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
பிற்பகலில் 800 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம், 95 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை ஆனது.
வெள்ளியின் விலையும் இன்று, ஒரு கிலோவுக்கு பத்தாயிரம் ரூபாய் உயர்வை கண்டது.
ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 83 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.
இன்று காலை நிலவரப்படி...
ஒரு சவரன் தங்கம் ரூ.94,400
ஒரு கிராம் வெள்ளி ரூ.182
சென்னையில், இன்று காலை நிலவரப்படி, 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை, ஒரு சவரனுக்கு 1,600 ரூபாய் உயர்வு.
ஒரு சவரன் 94,400 ரூபாய்க்கு விற்பனை.
வெள்ளியின் விலை, ஒரு கிராமுக்கு 9 ரூபாயும், கிலோவுக்கு 9,000 ரூபாயும் உயர்ந்தது.
ஒரு கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 82,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது.