ஈரோட்டில் பள்ளி மாணவ, மாணவிகள் இடையே செல்போன் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் விளையாட்டில் ஆர்வம் செலுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கிடாத்தான் ஓட்டம் நடைபெற்றது. மாணவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான விளையாட்டுகளை இணையத்தில் இருந்து டவுன் லோடு செய்து போனில் தங்களது நேரத்தை செலுத்தி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு விளையாட்டில் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ”செல்போனை ஓரம் வை கிரவுண்டில் காலை வை” என்ற பெயரில் கிடாத்தான் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் 4- வயதுக்கு மேல் உள்ள சிறுவர்கள் உற்சாகமாக பங்கேற்றனர். மேலும் இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.