பழனியில் மாநில அளவிலான பழங்கால நாணயக் கண்காட்சியை பள்ளி மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர். மூன்று நாட்கள் நடைபெறும் கண்காட்சியில் சோழர், பாண்டியர், பல்லவர்கள் காலத்து நாணயங்கள், பொற்காசுகள், பிரிட்டிஷ் கால ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவைகள் இடம்பெற்றுள்ளன.