மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெண் தேடும் இளைஞர்களை குறிவைத்து திருமணம் செய்த பிறகு நகை, பணத்தை கொள்ளையடித்து செல்லும் கும்பலை போலீஸார் கைது செய்தனர். பூதிப்புரம் கிராமத்தை சேர்ந்த பெருமாயி மகன் முருகனுக்கு பெண் தேடியபோது பெண்களை அழைத்து வந்து ஏமாற்றியதாக, பொள்ளாச்சி விஜயா, கோவில்பட்டி காளீஸ்வரி, அருப்புக்கோட்டை அருணாதேவி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.