விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் விலை உயர்ந்த இருசக்கர வாகனம் வாங்க சரக்கு வாகனத்தை திருடிய 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பணிக்கனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த அஜய் என்ற இளைஞர் இருசக்கர வாகனம் வாங்க நண்பர்களான அருண் பாண்டியன் மற்றும் சக்திமுருகன் ஆகியோருடன் சேர்ந்து சரக்கு வாகனத்தை திருடிய நிலையில், கைது செய்யப்பட்டனர்.