சென்னையில் ஜூன் மாதம் பயன்பாட்டுக்கு வரவுள்ள 35 மின்சார பேருந்துகள் பெரும்பாக்கம் மாநகர போக்குவரத்து பணிமனையில் நிறுத்தப்பட்டுள்ளன. இந்த பேருந்துகளில் நடைபெற்று வரும் ஆய்வுகள் முடிந்து பாதுகாப்பு சான்றிதழ் பெற்ற பிறகு, மாநகர போக்குவரத்து கழகத்திடம் முறைப்படி ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.